Loading...
மலர்ந்த முகம்
அன்பே
மலர்ந்த உன் முகத்தை காண
மலர்களே மறைந்து மறைந்து
பார்கின்றதாம் மறந்தும் உன்னில்
மயங்கிவிட கூடாது என்று.
புன்னகை
உன் புன்னகை
எனக்கு ஊக்கம் தரும் மருந்து
உன் பூவிழிகள் நீர் வடித்தால்
தங்காது
இந்த இதயம் என்னும் பருந்து..
யாரும் போகாத படகு
நீ மட்டும் ஏன் இத்தனை அழகு!.
நீ திட்டினாலும் சரி, கண்களுக்கு
மையை தீட்டினாலும் சரி
தீயாய் ஓடும் உன் நினைவுகள் என்னும் ஆற்றில்
யாரும் போகாத படகில் போய்க்கொண்டிருக்கிறது
என் இதயம்..
அழகிலும் அழகானவள்
அன்பே
அழகிலும் அழகானவள் நீ..
தினம் தினம் உன் புன்னகை கண்டு
புது புது புதிர்களை காண்கிறேன்
ஆனால் அணுவும் அசையாதது போல்
நீ அமைதி காப்பதேனோ..?
அழகிய கோபுரம்
சிலையின் மகிமையால் தன்
கோபுரங்கள் அழகு பெறுகின்றன!..
அழகிய கோபுரதால் சிலை
என்றும் மகிமை பெறுவதில்லை!..
சிலை போலத்தான் நீயும்
அதிலிருந்து தான் உயர்ந்து நிற்கின்றது
உன் குடும்பம் என்னும் அழகிய கோபுரம்!..
அழகிற்கு காரணம்
பொன் நகையால் மட்டும்
நீ அழகு பெறவில்லை
விலை கொடுத்து வாங்கிராத
உன் புன்னகையே அழகிற்கு காரணம்..
குறிப்பாக கூறினால் அந்த பொன்னகையே
உன் புன்னகையால் தான் அழகு பெறுகிறது!..
தேடாத தேனீ
நிலவே நீ மட்டும் ஏன் இத்தனை அழகு..?
நான் பார்க்கும் போதெல்லாம்
புன்னகையில் புதிது புதிதாய்
பூத்து கொண்டே இருக்கிறாய்!..
ஓடாத ஓடையாகவும்
தேடாத தேனீயாகவும்
கோணாத கேணியில் காணாத நீராகவும்
மாற்றம் பெறுகிறேன்
பெண்ணே உன் முகத்தை
பார்க்கும் போதெல்லாம்!..
புன்னகையில் பூத்த பூ
புன்னகையில் பூத்த பூவே
உன் கண்களின் இரு விழியிலும்
கன்னத்தில் விழும் சிறு குழியிலும்
தடுமாறி விழுந்தவன் நான்
இன்று நிலை மீறி நீந்துகிறான் உன் நினைவுகளில்!..
தேவலோக ராணி
கானகத்தில் கண்டேன் ஓர் அழகு நங்கை!
எனை மாற்றிய வீர மங்கை!
அவள் பொறுமையால் பொறாமை
பட வைத்து பெருமை சேர்பவள்!
ஆனால்
பெருமை பேசாத பெருமைக்கு உரியவள்!
பெற்றவளுக்கு பேர் சேர்ந்தவள்!.
தேன் நிலவில் உலவாடும்
தேவலோக ராணி அவள்!.
Copyright © TamilPrograms.in, All Right Reserved.